Friday, November 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா

சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றி கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.


இன்று பிறந்தநாள் (19/11/2010) காணும் முத்துக்காவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...


அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.


இவண்

அன்புத்தம்பிகள்

Friday, November 12, 2010

Wishes தேவ்


இன்று பிறந்த நாள் காணும் எங்கள் போர்வாள் கச்சேரி தேவ்க்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Monday, November 8, 2010

Wishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்!

வட அமெர்க்காவின் வடகரோலினா மாகானத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் ஆத்திகம் என்ற வலைப்பதிவின் பதிவர் திரு வீஎஸ்கே என்கிற சங்கர் குமார் அவர்களுக்கு தீபாவளி திருநாள் அன்று பேத்தி ஆர்யா பிறந்திருக்கிறாள்.

தாயும் சேயும் நலம்.

குழந்தையின் வருகை வீஎஸ்கே அவர்களில் இல்லத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று தந்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்த நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.