Friday, January 16, 2009

செய்தி: நியுயார்க் விமானம் ஆற்றில் விழுந்தது!

சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பாக...
நியுயார்க்-சார்லெட் செல்லும்,
US Airways-உள்நாட்டுப் பயணிகள் விமானம்,
நியுயார்க் ஹட்சன் ஆற்றில் விழுந்தது! - 57th Street & 12th Avenue!

150 பேர் விமானத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது! (Thursday Jan. 15, 2009: 16:30) - சுட்டி இதோ!

நியுயார்க் - ல’கார்டியா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய A-320 ஏர் பஸ் விமானம் சில நிமிடங்களுக்கு எல்லாம், ஆற்றில் விழுந்துள்ளது! பறவை தாக்கியதால் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது!
குளிர் தாங்க முடியாமல், சில பயணிகள், விமானத்தின் இறக்கை மீது, ஏறி நிற்பதை மக்கள் பார்த்துள்ளனர்.

நியுயார்க்கில் பணிபரியும் அல்லது இங்கே வந்துள்ள பதிவுலக நண்பர்கள் யாரேனும் இருந்தால்......
அவர்கள் நலம் குறித்து பெரிதும் கவலைப்படும் படியாக தற்போது ஒன்றும் இல்லை.


மீட்புப் பணிகள் முழு வீச்சில்!
உயிர்ச் சேதங்கள் இன்றி, ஆனால் காயங்களுடன் மீட்கப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





-----------------
16:49 - ABC
'Organized Chaos': Jet Hits Hudson, Lightning-Speed Rescue Saves All - Geese bring down a flight from New York to Charlotte. One passenger called the rescue that saved all 151 aboard "organized chaos," adding, "I'm lucky to be alive."
-----------------
17:11 - CNN
People who believe they may have had relatives on the flight may call US Airways at 1-800-679-8215 within the United States, the airline said
-----------------
17:12 - CNN
A US Airways plane with more than 150 people aboard was down in the Hudson River on Thursday after taking off from LaGuardia Airport, and everyone aboard is off the plane and alive, officials said
-----------------
17.19 - NY1
The FAA says all passengers have been evacuated from a U.S. Airways flight from LaGuardia Airport en route to Charlotte, N.C. that was forced to land in the icy Hudson River shortly after take-off

5 comments:

துளசி கோபால் said...

அடப்பாவமே(-:

ரவி,
இங்கே நியூஸிக்கு சுற்றுலாவந்த ரெண்டு அண்ணன்தம்பிகள் வயசு 24 & 22 க்ளேஸியரைப் படம்பிடிக்கக் கிட்டே போனப்ப டன்கணக்கில் ஐஸ் விழுந்து போயே போயிட்டாங்க.

கொடுமை என்னன்னா....இவுங்க பெற்றோர்கள் ஐஸ் விழும் காட்சியைப் பார்த்துக்கிட்டே நின்னுருக்காங்க. கீழே மகன்கள் இருப்பது தெரியாதாம்.

ஆஸ்த்ராலியன் டூரிஸ்ட்கள். ஆனாலும் இந்தியர்கள்.

Unknown said...

விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகளும் 3 பணியாளர்கள் 2 விமானிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பறவை மோதியதால் எந்திரம் பழுதடைந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி கோபால் said...

நல்ல சேதிக்கு நன்றி சுல்தான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ALL RESCUED!

Family Assistance For U.S. Airways Passengers:

A family assistance center has been set up at the Crowne Plaza for family members of passengers of the U.S. Airways flight 1549 that had to land in the Hudson River this afternoon.

U.S. Airways has set up an information hotline for family members to contact. The number is 1-800-679-8215.

Anonymous said...

திறமையான விமானத் தலைவ்ர்,
ஆற்றில் மெதுவாக இறக்கி அனைவரையும் காப்பாற்ற உடனே உழைத்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் குவிகின்றன.