Monday, October 29, 2007

மதிக்கு ஹேப்பி பர்த்து டே!!

இவங்க பேரு: சந்திரமதி கந்தசாமி

இவங்க ஊரு: கனடா

இங்கெல்லாம் எழுதறாங்க: http://mathy.kandasamy.net/

Musings: http://mathy.kandasamy.net/musings

Movietalk: http://mathy.kandasamy.net/movietalk


மூத்த வலைப்பதிவரும் (வயசுல இல்லீங்க) "சகலகலாவல்லி", "உலகத் திரைப்பட விமர்சகி", "மினி என்சைக்ளோபீடியா" என்று போற்றப்படுபவருமான மதிக்கு நேற்று (28.10.19**) பிறந்தநாள்.




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி!
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோமில்ல!!!
வாழ்த்துவோர்..
சங்கம்
வலைப்பதிவர்கள்
மற்றும்
நண்பர்கள்

23 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி :)

ரொம்ப நாள் ஆச்சு உங்களை தொடர்பு கொண்டு :)

Ayyanar Viswanath said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் மதி..
வாழ்க வளமுடன்.

பூனைக்குட்டி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி!

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதியக்கா.... :)

ஜோ/Joe said...

மதி அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மதுமிதா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மதி.

தங்கள் முயற்சியும் உழைப்பும் மென்மேலும் சிறக்கட்டும்.

Anonymous said...

மதி அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

+/-ஞானமேகம் said...

++++மதியக்காக்குப் பொறந்தநாளு++++


புங்குடு தீவிற் பிறந்தவரே
புகலிடம் வரையில் நடந்தவரே
இந்தியத் ஈழத் தமிழ்கலந்து
இனியநற் பதிவுகள் இடுபவரே

தமிழ் வலையுலகின் தலைமகளே
தலைமறை வாகிப் போனவரே
கருத்துக்கள் கூறும் கலைமகளே
கவிழ்த்தவர் உமையார் சொல்லுங்கள்

தமிழ்மண முங்களை எறிஞ்சிட்டோ
தலைக்கனம் உங்களை எறிஞ்சிட்டோ
வருபவர் குறைஞ்சு வனப்பிழந்து
வாடிக் கிடக்கோ பதிவெல்லாம்

தாமே உலகம் எனநினைத்தோர்
தரணியில் நிலைத்தது கிடையாது
நாமே புரிஞ்சு நடக்காட்டால்
நாயும் மதிக்கா நிலைதாமே

கோபம் குளத்தோ டென்றிட்டால்
குறையா ருக்கெனச் சொல்லுங்கள்
நாமும் சொல்லி வராவிடால்
நாளை மறந்திடுஞ் செல்லுங்கள்

கோபம் நேசம் கதையெல்லாம்
குழந்தைப் பிள்ளை விளையாட்டு
பாவம் போதும் பரிதாபம்
பதிவிட மீண்டும் வாருங்கள்

வாழிய வாழிய பல்லாண்டு
வலைமகுடம் நீ வாழியவே

+/-ஞானமேகம்

லக்ஷ்மி said...

தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதி.

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;)

துளசி கோபால் said...

முந்தாநாளு மதிக்கு ஒரு மடல் போடலாமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து, விக் எண்ட் ஓட்டத்துலெ
அடிச்சுக்கிட்டு போயிருச்சுப்பா.

நல்லவேளை நீங்க ஒட்டுன போஸ்டருக்கு முழு ஆதரவும் கொடுத்து,
நம்ம மதி நீடூழி வாழ்ணுமுன்னு வாழ்த்துகின்றேன்.

CVR said...

மதி கந்தசாமி அவர்களுக்கு என் உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! :-)

theevu said...

மூத்த வலைப்பதிவரும் (வயசுல இல்லீங்க) "சகலகலாவல்லி", "உலகத் திரைப்பட விமர்சகி", "மினி என்சைக்ளோபீடியா" என்று போற்றப்படுபவருமான ஈழவரசி இளவரசிக்கு வாழ்த்துக்கள்.

thiru said...

வாழ்த்துக்கள் மதி!

ILA (a) இளா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

மதி அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
-இலங்கை நண்பர்கள்-

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதி...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மதி அக்கா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

யக்கோவ்
ஞானமேகம் கவிதை அருமை! அதன் ஈற்றடிகளை நானும் சேர்த்துச் சொல்கிறேன்!

வாழிய வாழிய பல்லாண்டு
வலைமகுடம் நீ வாழியவே

Radha Sriram said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி....!!.i share your birthday.....what a coincidence??!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காயத்ரி,

என்ன கொடுமை இது?! ;) (ஒரு வழியா சென்னை28 பார்த்துட்டேன்னு சொல்லிக்க வேற வழி? ;) )

நேத்திக்கு மடல் போட்டப்பவே நான் முழிச்சிருக்கணும். சென்டியா ஃபீல் பண்ண வைச்சுட்டீங்கப்பா! நன்றி.

நாகை சிவா: நன்றி சிவா. சூடான்ல நலமாயிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

அய்யனார்: நன்றி! ;) தனிமையின் இசையில் ஒரே கவிதை மழை போலக்கிடக்கு. கூகுள் ரீடர் முழுக்க உங்க இடுகைகளா இருக்கு. ;)

முத்துலெட்சுமி: நன்றிங்க. இப்பல்லாம் புகைப்படங்கள் போடுறதில்லப்போல? ;)

மோகன்தாஸ்: நன்றி! புத்தகங்கள் அள்ளிட்டு வந்திருக்கீங்கபோல.

இராம்: நன்றி ராயல். திருந்தமாட்டேங்குறீங்களே. ;)

ஜோ: அது சரி!!! வாழ்த்துகளுக்கு நன்றி ஜோ. சில நாட்களுக்கு முந்தி ஒரு படம் பார்த்தேன். ரொம்பவும் ரசிச்சுப்பார்த்தது. இன்னிக்கு ஒரு இடுகை போடலாம்னு இருக்கேன்.

மதுமிதா: நன்றி! நலமாக இருக்கிறீர்களா?

அனானி: நன்றி. மதி என்று விளித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

லக்ஷ்மி: நன்றிப்பா.

கோபிநாத்: நன்றி தல.

துளசிகோபால்: :) மடல் அனுப்பினாத்தானா. வாழ்த்துகளுக்கு நன்றி

சிவிஆர்: மிக்க நன்றி!

தீவாரே: வாங்க. வாங்க. நானே ஒரு தீவில பிறந்தவள் எண்டபடியா உங்களில ஒரு பாசம் இருக்கு கண்டியளோ.

திரு: நன்றி!

இளா: மிக்க நன்றி

-இலங்கை நண்பர்கள்- : மக்களே நண்பர்கள் எண்டு வேற சொல்லிட்டீங்க. மதி எண்டு கூப்பிடுங்க. சரியா. வாழ்த்க்களுக்கு நன்றி! ;) கே.எஸ்.ராஜா சொன்னமாதிரி எடுத்துக்கொள்ளுறன். ;)

வெ.பாலாஜி: மிக்க நன்றி! ஊருக்குப் போன கதையில் கடைசியில ஊருக்குள்ள நுழையிற விவரிச்சது பிடிச்சிருந்தது. உங்க ஊரைப்பத்திக் கொஞ்சம் எழுதலாம்ல? (எழுதி தவற விட்டிருந்தா. கொஞ்சம் சொல்லிருங்க. :) )

ரவிசங்கர்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! என்னை மதி என்று விளித்தால் சந்தோ்ஷமாக/சௌகரியமாக உணர்வேன். நன்றி! by the way, Paula Richmanஇன் Many Ramayanas: The diversity of a narrative tradition in South Asia படிச்சிருக்கீங்களா? இன்னும் சில சுவாரசியமான எண்ணத்தைத் தூண்டும் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

அனைவரின் வாழ்த்துகளுக்கும் நெகிழ்ச்சியான நன்றியுடன்,
மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

+/-ஞானமேகம்,

எனக்கு கவி காளமேகம் பிடிக்கும். கானமயில் ஆடக்கண்ட வான்கோழி மாதிரின்னு சொல்லவேண்டியதில்ல.. ;) எனிவே வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வேண்டியது சம்பிரதாயமான வழக்கம். அதற்காக நன்றி.

மற்றபடிக்கு, மணம் வீசுதேன்னு குட்டைக்குள்ளயே விழுந்து கிடந்தா இப்படித்தான் ஆவும். ஊருலகத்தில என்ன நடக்குதுன்னே தெரியாது. சுளுக்கெடுத்தாத்தான் சரிவரும்னு நினைக்கிறேன். இங்க வேணாம். i would like to be gracious and would like to thank all the fellow bloggers here. என்னோட இடத்தில நான் ஆற அமர இருக்கும் ஒரு பொழுதில் வைச்சுக்கலாம். Now, scram!

-மதி