Showing posts with label Wishes. Show all posts
Showing posts with label Wishes. Show all posts

Wednesday, June 15, 2011

Wishes: ஆட்சியர் ஆனந்த குமார்

ஈரோடு மாவட்ட கலைக்டர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் தனது மகள் கோபிகாவை இன்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளி , குமளான்குட்டை ,ஈரோடு இல் 2 வகுப்பில் சேர்த்துள்ளார்!  அவரின் இந்தச் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்!




இவண் 
ஈரோடு பதிவர் குழுமம்

Wednesday, June 8, 2011

திருமண வாழ்த்துக்கள்: கப்பி பய!

சான்றோர் உடைய தொண்டை நாட்டிலே, பட்டு போல் ஜொலிக்கும் ஆரணியிலே!!

* ஞானக் குழந்தை
* சிறுகதைச் சிற்பி
* சங்கத்தின் சிங்கம்
* காஞ்சித் தலைவன்
* கோலிவுட்டின் ஹ்ருதிக் ரோஷன்
......இப்படியான பல பட்டங்களைச் சுமந்து நிற்கும்

தி ஒன் & ஒன்லி ஒன்.....கப்பி பய
அண்ணலுக்கு இன்று திருமணம்! (Jun-8-2011)
சங்கத்தின் கடைக்குட்டிக் கல்யாணம் :)) அதுனால கடலை உடைச்சிக் கல்யாணம்! :))

பாக்யரதி - அப்பண்டை ராஜ்
என்னும் இந்த திவ்ய தம்பதிகளை....வாழ்த்துங்க மக்கா!!!


மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் கப்பி அப்பண்டைராஜ் வந்துன்னை
கைத்தலம் பற்ற மணங்கண்டாய் பாக்யரதி!


இளவரசர் வில்லியம் திருமண விருந்தை மிஸ் பண்ணவங்க எல்லாம், இன்னிக்கி இளவரசர் கப்பி கொடுக்கும் ராயல் விருந்துக்கு ஆஜராயிடுங்க!

இனிக்கும் இல்லற வாழ்த்துக்கள், specially for Kappi, specially from me! :)
and all of us, from Sangam! Sangam! Sangam!

Wednesday, January 5, 2011

Wishes - ஆயில்யன்



வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Tuesday, December 28, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.


Sunday, September 26, 2010

Wishes: 11 ஆம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள் - ஆ.ஞானசேகரன் !


சிங்கப்பூர் பதிவர் மற்றும் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நிழல்படக் கலைஞர் அம்மா அப்பா பெயரில் பதிவு வைத்திருப்பவரும், எனது நெடுநாள் நண்பருமான திரு ஆ.ஞானசேகரன் இணையர்களுக்கு இன்று 11 ஆம் ஆண்டு திருமண நாள்.

திரு ஞானசேகரன் இணையர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, June 24, 2010

New born wishes - இம்சை அரசி & மோகன் பிரபு

நேற்று இரவு குட்டி தேவதையின் பெற்றோராய் பதவியேற்றம் பெற்றிருக்கும் இம்சை அரசி & மோகன் பிரபு தம்பதியருக்கும், குட்டி தேவதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)



குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

Thursday, May 27, 2010

Wishes: ஜிரா!

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2010)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! :)



பதிவுலகில்...
ரொம்ப நாள் கழித்து....
ஜிரா எழுதும் பதிவு...................இங்கே!

Sunday, May 16, 2010

Wishes - திவ்யப்ரியா


இன்று பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் ஆசிகளுடன் தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் திவ்யப்ரியா & சரவணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!

வாழ்த்துவோர்,
சங்கம்.

Thursday, May 6, 2010

டாக்டர்.ருத்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாக்டர்.ருத்ரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

Wednesday, April 7, 2010

Wishes - சந்தனமுல்லை @ பப்பும்மா

இன்று (7-ஏப்ரல்) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் பப்பு @ குறிஞ்சிக்காக பதிவுகளை எழுதி வரும் எழுத்தாளரும், அன்பிற்கினிய சகோதரியுமாகிய சந்தனமுல்லை அவர்களுக்கு பப்பு பேரவை சார்பாகவும், சங்கம் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



என்றும் மகிழ்வுடனும், நலமுடனும் அனைத்து வளங்களுடனும் வாழ வாழ்த்துகின்றோம்.

பப்பு பேரவை - தோஹா - கத்தார்
அகில உலக பப்பு பேரவை மற்றும் சங்கம்

Thursday, March 11, 2010

Wishes - சிபி

இன்று திருமணநாள் கொண்டாடும் அண்ணாச்சி சிபிக்கும் - அண்ணி தேவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)



டிஸ்கி : ட்ரீட் வேணும்ங்கறவங்க உடனே கோவை சென்று பெற்றுக்கொள்ளலாம் :))

Friday, February 19, 2010

Wedding - .::மை ஃபிரண்ட்::. @ அனுராதா - விஜயகுமார்



இன்று (19-02-2010) இல்லறம் என்னும் நல்லறத்துக்குள் புக இருக்கும் அருமைச் சகோதரி, தமிழ் பதிவிலகின் தன்னிகரில்லாத பின்னூட்டப் புயல், தேன் கிண்ணத்தில் குடி கொண்டிருந்த கோமகள், இனி M.விஜயகுமார் அவர்களின் மன சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகும் மணமகள் மலேசியாவைச் சேர்ந்த .:: மை பிரண்ட்::. @ அனுராதா அவர்களுக்கும், அவர்களது வாழ்க்கைத் துணைவருக்கும் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.




இருவரும் ஒருவராக இருமன ஒருமையோடு
இல்லறம் சிறக்க வாழ்ந்து என்றுமே இன்புற்றிங்கு
குயிலிவள் வாழ்த்திற்கொப்பக் குவலயம் போற்ற என்றும்
குறைவிலா மகிழ்ச்சியோடு குலமகள் வாழ்க வாழ்க!

வாழ்த்துவது
சங்கம்.

Friday, February 5, 2010

Wishes: துளசி டீச்சர்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இன்று பிப்ரவரி 5 தனது பிறந்தநாளைக் கொண்டாடும்...

* தமிழ் இணையத்தின் தானைத் தலைவி...
* பின்னூட்ட வித்தகர்....
* பதிவுலக நல்லாசிரியை,
* கலாச்சாரத் தூதுவர் (Cultural Ambassador),
* அனைவருக்கும் டீச்சர், மாதாமகி
* ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி
* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா,ஆவுஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,

******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா!



விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீச்சரின் துளசி தள ஸ்பெஷல் கீரை பக்கோடாவும், ஜாங்கிரியும் வழங்கப்படும். அதோடு துளசியானந்தாமயி வழங்கும் துளசி தீர்த்தத்தையும் அருந்தி அமைதியாக வாழ்த்தி விட்டு செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!







பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு துளசி மணம் கமழ
நல்லாண்டு நாளும் இருக்க வாழ்த்துகின்றோம்!

Sunday, January 31, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - இனியவள் புனிதா

இன்று (01-பிப்ரவரி-2010) பிறந்தாநாள் காணும் அக்கா புனிதாவுக்கு இன்று போல் என்றும் வாழ்க்கை இவரைப்போலவே இனிமையாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்.



உள்ளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)

Tuesday, January 5, 2010

Wishes - ஆயில்யன்



வலையுலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.




மேற்கண்ட போட்டோ எடுக்க பல புகைப்படக் கலைஞர் இணைந்து மேற்க்கொண்ட புராஜெக்ட் பற்றி அறிய குசும்பனின் இந்த பதிவைப் பார்க்கலாம்.

Monday, January 4, 2010

Wishes : விக்கி என்கிற விக்னேஷ்வரன்

மலேசியா, ஈப்போ மாநிலத்தைச் சேந்த நம் பாசமிகு பதிவரும் அன்புத் தம்பியுமான விக்கி என்கிற விக்கினேஷ்வரனுக்கு பொறுப்பான பதவியுடன் கூடிய அரசு வேலை கிடைத்துள்ளது.


தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, அரசு வேலையில் திறம்பட செயல்பட்டு மேலும் பல பதவிகளையும் சிறப்புகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவோர்

சிங்கைப் பதிவர்கள் குழு.

விக்கிக்கு உங்களது வாழ்த்துகளும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

Wishes : ஆளவந்தான்

இன்று அமர்க்களமாய் தன் பிறந்தநாளை கொண்டாடும் அழகர் (a) ஆளவந்தான் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Monday, December 28, 2009

Wishes - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.



ஒரு கவிஞருக்கு கவிதையாலேயே வாழ்த்துச் சரத்தை தொடுக்கலாம் என எண்ணுகின்றோம். எனவே பின்னூட்டத்தில் சிறந்த வாழ்த்துக் கவிதை எழுதுபவர்களுக்கு கவிஞர் பட்டம் வழங்க முத்துச்சர ரசிகர் மன்றம் முடிவு எடுத்துள்ளது.... ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்திச் செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்... :-))

Thursday, December 24, 2009

Wishes : Jesus BirthDay !




அனைவருக்கும் சங்க(ம)ம் சுவரொட்டி சார்பில் கிறிஸ்து பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !