Showing posts with label June. Show all posts
Showing posts with label June. Show all posts

Wednesday, June 8, 2011

திருமண வாழ்த்துக்கள்: கப்பி பய!

சான்றோர் உடைய தொண்டை நாட்டிலே, பட்டு போல் ஜொலிக்கும் ஆரணியிலே!!

* ஞானக் குழந்தை
* சிறுகதைச் சிற்பி
* சங்கத்தின் சிங்கம்
* காஞ்சித் தலைவன்
* கோலிவுட்டின் ஹ்ருதிக் ரோஷன்
......இப்படியான பல பட்டங்களைச் சுமந்து நிற்கும்

தி ஒன் & ஒன்லி ஒன்.....கப்பி பய
அண்ணலுக்கு இன்று திருமணம்! (Jun-8-2011)
சங்கத்தின் கடைக்குட்டிக் கல்யாணம் :)) அதுனால கடலை உடைச்சிக் கல்யாணம்! :))

பாக்யரதி - அப்பண்டை ராஜ்
என்னும் இந்த திவ்ய தம்பதிகளை....வாழ்த்துங்க மக்கா!!!


மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் கப்பி அப்பண்டைராஜ் வந்துன்னை
கைத்தலம் பற்ற மணங்கண்டாய் பாக்யரதி!


இளவரசர் வில்லியம் திருமண விருந்தை மிஸ் பண்ணவங்க எல்லாம், இன்னிக்கி இளவரசர் கப்பி கொடுக்கும் ராயல் விருந்துக்கு ஆஜராயிடுங்க!

இனிக்கும் இல்லற வாழ்த்துக்கள், specially for Kappi, specially from me! :)
and all of us, from Sangam! Sangam! Sangam!

Tuesday, June 29, 2010

நம்ப மக்காவுக்கு பொறந்தநாளுங்க

கவிதையை பொழப்பாக்கி
வாழற சனம் மத்தியிலே
கவிதையை பொறப்பாக்கி
தெனம் தந்த ராசா

கருவேலமரத்து நிழலு
வெயிலு நேரத்தோட ஓஞ்சுச்சு
அந்த நிழலோட வெப்பத்தையும்
உணர வைக்கும் உன் கவிமூச்சு


கோயில்ல சாமியைவச்சு படைக்குற
மனுசப்பயலுக்கா(க) - எங்க
சாமி மனசை கோயிலாக்கி
வாழுது பாரு மக்கா

சோத்தை பங்கு போட்டு
பாசத்தை ஊட்டும் தாயா(ய்)
நேசத்தை நெஞ்சுல வைச்சே
எழுத்தை சுமந்தே சேயா(ய்)

இத்தனை அன்பை எழுத்துல வச்சு
ஆதரவா தோளுல தூக்கி
செல்லமா முத்தங்கொடுத்து
தமிழை தாலாட்ட உன்னைத்தாண்டி
யாருமில்லை ஈடு..
கவிதை புரியாதவனை புரியவைக்க
எடுக்கலை நீ பாடு...

உன் குடும்பமுன்னு சொல்லும்போது
நானுமிங்க சேர்ந்து நிப்பேன்.
உன் பொறப்புல ஒண்ணா இல்லையேன்னு
கொஞ்சம் தவிச்சு வைப்பேன்

***

இன்னைக்கு (29/06/2010) பொறந்த நாளு கொண்டாடுற, நம்ப மக்கா பா. ராஜாராம் அண்ணனுக்கு ஒறமொறை சகிதமா வாழ்த்துச் சொல்ல கூப்பிடுறேன்.

வந்து வாழ்த்திட்டுப் போங்க மக்கா!
*
*

Sunday, June 27, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கென் aka சாந்தாமணி கென்

வாழ்வு

தனித்த விதையொன்று
பாறையிடுக்கில்
முளைவிட

உயிர் தீரும் அவசரத்தில்
நீர்த்தேடி விரைந்தன
வேர்கள்

ஆழ்த்துளையிட்டு
வறண்ட நதியில்
சுரப்பைக்கண்டு பருகின

கருக்கிட்ட சூரியனை
அளந்திட உயர்ந்து
எழுகையில்
கிழிப்பட்ட துளைகளில்
முகம்காட்டுகிறதாம்
வெளிச்சப்புள்ளிகள்

ஈரம் கசியும் நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓரமாய் .....

********



இன்று 27.06.2010 இனிய பிறந்த நாளில், கென் aka சாந்தாமணி கென்’க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்...!

Saturday, June 26, 2010

வாழ்த்துக்கள் - வெயிலான்






இன்று

(26/06/2010)

பிறந்த நாள் விழா காணும்

இன்றைய திருப்பூர் பதிவர் சங்கத் தலைவர்,

நாளைய அனைத்துலக பதிவர் சங்கத் தலைவர்,

நாளை மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி

வாழும் வரலாறு

எங்கள்

வெயிலானை

வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசி பெறுகின்றோம்.






இங்ஙனம்....

அனைத்துலக தமிழ் வலைப்பதிவர் பேரவை, சங்கம், அமைப்பு, கட்சி, கழக உடன்பிறப்புகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள்

*
*

Thursday, June 24, 2010

Wishes:கண்மணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் கண்மணி டீச்சருக்கு உங்க வாழ்த்துக்களை அள்ளி வீசுங்க.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!

வாழ்த்துவோர்,
சங்கம்