Showing posts with label New Born. Show all posts
Showing posts with label New Born. Show all posts

Thursday, July 7, 2011

New Born: குட்டி சுறா

ஊர்ல இவருக்கு பேர் சுறா. கார்த்தி என்று கூப்பிட்டா, “மொக்கை” சிவா மாதிரி Call me Sura அப்படின்னு உருமற ஆள் இவரு.  விகடன்ல அவர் படம் ஒரு பக்கத்துக்கு போட்டப் கூட நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம். ஆனா பயப்பட்ட மாதிரி 1000 பேர் எல்லாம் புரபோஸ் பண்ணலை. பேட்டா விலை மாதிரி ஜஸ்ட் 999 பேர் மட்டுமே புரபோஸ் பண்ணினாங்க.

சரி, கார்த்தியோட முழுநேர தொழில் என்னான்னு தெரியுங்களா”? “ஃபாலோ பண்றது” . மேலும் விளக்கனும்னா கீழே இருக்கிற படத்தைப் பார்த்துக்குங்க



. இந்தப் படம் பார்த்தும் புரபோஸ் பண்ற இளைஞிகளுக்கு சொல்லிக்கிறது ஒன்னுதான் . 6-ஜூலை அன்னிக்குதான் குட்டி சுறா பிறந்தாரு. வாழ்த்துகள் சுறா (அ) கார்த்தி

பட உதவி: விகடன்
படம் எடுத்தது: ஜீவ்ஸ்

Friday, March 18, 2011

Wishes: பாஸ்டன் ஸ்ரீராம்- It's a Baby Girl

புரொபைல்ல சின்ன வயசுல எடுத்தப் படத்தைப் போட்டு, நம்மளை எல்லாம் ஏமாத்தின பாஸ்டன் ஸ்ரீராம் இன்று(Mar-17 8:25PM EST) ஒரு தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

Many Many Many more happy returns of the Day SriRam! :)


Thursday, July 15, 2010

Wishes : நிஜமா நல்லவருக்கு நிஜமான தேவதை !

பதிவுலக அன்புத்தம்பி நிஜமா நல்லவருக்கு இரண்டாவது குழந்தையாக குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.




Baby Profile Graphics and Comments



குட்டி தேவதை நல்லாசிகள், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், குட்டி தேவதையின் சுட்டி அண்ணனுக்கும் நல்வாழ்த்துகள் !

Thursday, June 24, 2010

New born wishes - இம்சை அரசி & மோகன் பிரபு

நேற்று இரவு குட்டி தேவதையின் பெற்றோராய் பதவியேற்றம் பெற்றிருக்கும் இம்சை அரசி & மோகன் பிரபு தம்பதியருக்கும், குட்டி தேவதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)



குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, November 9, 2009

NewBorn: அப்பாக்கள் கார்த்திகேயன் & ஷோபன் பாபு


ரெண்டு சந்தோஷமான விஷயம்ங்க..

முதல்ல ப்ளாக் யூனியன்ல செல்லமாக தல என்று அழைக்கப்படும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியர் நவம்பர் 5-இல் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இரண்டு நாளுக்கு முன்னாடி அதாவது நவம்பர் 3-இல் ஷோபன் பாபு - ஷாந்தி தம்பதியருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கா..

இந்த இரண்டு தம்பதியர்களுக்கும், முக்கியமாக இரண்டு புது அப்பாக்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். :-)

Happy Birthdays Kutties :-)

Tuesday, October 20, 2009

New born Wishes : குசும்பன் & மஞ்சு

குசும்பன் & மஞ்சு தம்பதியருக்கு இன்று அதிகாலை 4.15 மணிக்கு அழகிய (பையன் மஞ்சு மாதிரி தான் இருக்காராம். அதனால இந்த வார்த்தை கரெக்டு தான் :D) ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராய் ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் தம்பதியருக்கும், ஜீனியர் குசும்பருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் :)



வாழ்த்துவோர்,
சங்கம்

Saturday, October 10, 2009

Wishes: கொங்குராசா

கொங்குநாட்டுத் தங்கம், கொங்குராசா:

Blessed with a Baby Girl

Friday, August 7, 2009

New Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்


தல பாலபாரதி - மலர்வனம் லக்ஷ்மி தம்பதிகளுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.

சிங்கக் குட்டிக்கும், பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வன் எல்லாப் பேரும் புகழும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்..

இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.


வாழ்த்துவோர்,
சங்கம்

Friday, July 31, 2009

Wishes: திராச!

நம்ம திராச ஐயா, தாத்தா ஆயிட்டாருங்கோ! :)
சிங்கையில் பிறந்த தங்கப் பேரன் பேரு சாரங்! (Saarang)

* சாரங்கா-ன்னு ராகம்!
* சாரங்கி-ன்னு இசைக் கருவி!
* அதுக்கும் மேல எம்பெருமான் திருக்கை வில்லுக்குப் பேரு சாரங்கம்! சாரங்கபாணி!
So, நம்ம திராச பேரன் வில்லு! :)

தாழாதே "சாரங்கம்" உதைத்த சர மழை போல் - வாழ்க! வாழ்க!
இனிய வாழ்த்துக்கள் சேய்க்கும், தாய்க்கும், தந்தைக்கும், தாத்தா பாட்டிக்கும்! :)

Wednesday, May 27, 2009

Wishes: லக்கிலுக்


குட்டி தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக்/யுவகிருஷ்ணா' அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Thursday, May 7, 2009

Wishes:தேவ்


சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் தம்பதிக்கு நேற்று (06-05-09) காலை ஆண் மகவு பிறந்துள்ளது.

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணன் & அண்ணி.

Wednesday, December 10, 2008

Wishes: முரளி கண்ணன் With புத்தம் புதிய ஸ்டார் !

நம்ம 'வலையுலக ஃப்லிம் நியூஸ் ஆனந்தன்'
முரளிகண்ணனுக்கு நேற்றிரவு 11.15 மணிக்கு (இரண்டாவதும்)
மகன் பிறந்துள்ளான்.

தாயும் சேயும் நலம்.

முரளி கண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

(கோ.வி-ஜி... போஸ்டர் ரெடியா?)

--
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)


கூடவே வாழ்த்துபவர்கள்,

Tuesday, November 4, 2008

New Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்


வெட்டிப்பயல் பாலாஜி அண்ணனுக்கும் சரண்யா அண்ணிக்கும் குட்டி தேவதை பிறந்திருக்கா.
குட்டி தேவதையின் வருகை இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷங்களை கொண்டு வர வாழ்த்துவோமாக.

வாழ்த்துவோர்,
சங்கம்

Friday, September 26, 2008

Wishes: வானவராயனுக்கும், ராணிக்கும் வாரிசு வந்தாச்சு !



சின்னக் கோடம்பாக்கம் (கோபி), சின்ன ரஜினி வீட்டில், துள்ளி விளையாட ஒரு குட்டி ரஜினி பிறந்திருக்கிறார்.

கடந்த வியாழன் 18/செப்/2008 அன்று, மனசாட்சி பதிவர் கிரி அப்பாவாக ஆகி இருக்கிறார்.

அறுவை (சிசேரியன்) செய்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, குழந்தையின் எடை 3.2KG.

தாயும் சேயும் நலம் !

"என்னைய்யா பேரு வைக்கப் போறே... குசேலன், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ?" தொலைபேசியில் கேட்க,

"அடபோங்க...என்ர மவனுக்கு தமிழ் பேரு வெக்காம வேற பேரு வெப்பேனாக்கும்" என்றார்


எல்லோரும் குட்டி ரஜினியையும் புதிய அப்பா-அம்மா ஆகி இருக்கும் கிரியையும் அவரது மனைவியையும் வாழ்த்துவோம்





Thursday, June 5, 2008

Newborn: அம்பிக்குப் ப்ரமோஷன்

நமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய "டாம் அண்ட் ஜெரி"புகழ் ப்ளாக் யூனியனின் முடிசூடா மன்னன் திரு.அம்பி அவர்கள் ஒரு குட்டி டாமிற்குத் தந்தையாக இன்று காலை 12.35(IST) மணிக்குப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.



இந்த இனிய வேளையில், அம்பிக்கும் அவருடைய துணைவியாருக்கும் நம்ம எல்லோருடைய நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம் வாங்க.

Saturday, February 9, 2008

New Born: தேன் சொட்ட பதிந்துவரும் சிறில் அலெக்ஸ்



Blessed with a Baby Girl on Feb 05. We all Congratulate Cyril Alex..


By,
Sangamam & Sangam Groups

Wednesday, November 21, 2007

ரஜினி ராம்கிக்கு அப்பா பிரமோஷன்

இனிய இல்லறத்தின் இனிய பயனாய் இன்று அழகான குட்டித் தேவதைக்கு அப்பாவாக வாழ்வில் உயர்வு கண்டிருக்கும் நண்பர் ரஜினி ராம்கி அவர்களை வாழ்த்துகிறோம்.

குட்டித் தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறோம்.




இவண்

சங்கம் மற்றும் இணைய நண்பர்கள்

Saturday, November 3, 2007

Wishes: தெக்கி


நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டான் 01.25(IST)க்கு காவ்யான்னு ஒரு குட்டி தேவதையை வரமாய் பெற்றிருக்கார். தாயும் சேயும் நலம். புது வரவுக்கு நல்வாழ்த்துக்கள்.

வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ