Monday, August 27, 2007

Wishes: மணி பிரகாஷ்


கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா

தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*** stanza 2.. ***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா

ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா
(நன்றி: கவிஞர் அருண்)

சின்சினாட்டி சிங்கம்
திண்டுக்கல் திரிசூலம்
நடன சூராவளி
காலெண்டர் கவிஞர் ,
தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணிபிரகாஷ் அவர்கள் இன்று ஆயுள் கைதியாகிறார்..
திருமணம் என்ற சிறையில் அடைக்கப்படுகிறார்.


இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பா!!


வாழ்த்துவோர்,
கோபிநாத் & சங்கம்

Wishes: ஓனம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்



வாழ்த்துவோர்,

சங்கம்

Friday, August 24, 2007

Wishes: அனுராதா


அனுராதா அவர்கள் மற்றும் அவர் கணவருக்கு 36-ஆவது வருட திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
சங்கம்

Wednesday, August 22, 2007

Wishes:Desikan


அவுங்க அவுங்களுக்கு 40 வயசானா வர பயம் இந்த வியாதிங்கதான். ஆஸ்துமா, வெள்ளெழுத்துன்னு நிறைய இருந்தாலும் சோத்துல கை வெக்கிற ஒரே விஷயம் சக்கரை வியாதி, அதை எழுதி பீதிய கிளப்பின அந்த Gun, பெரும் எழுத்தாளர் சுஜாதாவின் நெருங்கிய நண்பருமான
Desikan அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


Wishes By
Sangam Groups
Wishes Requested By செந்தழல் "ரவி"

செல்வேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



கொலை வெறியுடன் கவுஜ எழுதி கன்னா பின்னானு பதிவு போட்டு கலக்கற
தம்பி தங்கக் கம்பி திரு செல்வேந்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
டிஸ்கி : (தம்பி நீ வாங்கி குடுத்த டீக்கு இவ்ளோதான் வாழ்த்த முடியும்)

Tuesday, August 21, 2007

Wishes : பின்னூட்டப் புயல்


பார்த்திரு.

காத்திரு.

ஒரு நாள்

எனக்கும்

கவிதை வரும்!


என்று கவிதை எழுதியது ஒரு கவிதை!


அறுசுவை உலகில் கொத்ஸ் பரோட்டா என்று தனக்கே உரிய பாணியில் ஏழாவது சுவை ஒன்றை அறிமுகப் படுத்திய நளபாகன்!


ஆன்லைனில் வெண்பாக்கள் புனைய டிப்ஸ்களை அள்ளிக் கொடுக்கும் வள்ளல்!


பின்னூட்ட இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த இலவச இலக்கியம்!




அவருக்கும் இன்னிக்குத்தாங்க பொறந்த நாளு!


அவரையும் சங்கம் மனதாரா வாழ்த்துதுங்கோவ்!


என்னென்னிக்கும் நல்லா இரு ராசா!


வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!


ரெடி.

ஸ்டார்ட் மீசிக்!




ஏதோ எங்களால முடிஞ்சது. இலவசமா கேக்குலயே வூடு கட்டி வெச்சிட்டோம்!

Wishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்

இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.


நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!





1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி



2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )



3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.


4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.




ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!