Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Wednesday, August 22, 2007
செல்வேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கொலை வெறியுடன் கவுஜ எழுதி கன்னா பின்னானு பதிவு போட்டு கலக்கற தம்பி தங்கக் கம்பி திரு செல்வேந்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். டிஸ்கி : (தம்பி நீ வாங்கி குடுத்த டீக்கு இவ்ளோதான் வாழ்த்த முடியும்)
பற்பல பிறவிகள் வாங்க பிக்பஜார் செல்ல நான் ஓடத்தில் ஏறினேன் ரவுண்டானாக்களை கடக்க திராணியில்லாத அந்த ஓடத்தின் வெளிச்சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தது
பின் தொடர்ந்த ஆடுகள் போஸ்டர்களைத் தின்றன பிதாவே இவர்களை மன்னித்து நன்றாக சமையுங்கள்
3 comments:
பழங்காலத்தில் பல்சர் இருந்தது
அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே
திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று இன்னும்
வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால் பிஸ்கட் திங்கும் புலியாம்
பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து வரையப்பட்ட
நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்
ஆதாம் கையில் கிடைத்த பால்பாயிண்ட் பேனா
பற்பல பிறவிகள் வாங்க
பிக்பஜார் செல்ல நான்
ஓடத்தில் ஏறினேன்
ரவுண்டானாக்களை கடக்க
திராணியில்லாத அந்த ஓடத்தின்
வெளிச்சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தது
பின் தொடர்ந்த ஆடுகள்
போஸ்டர்களைத் தின்றன
பிதாவே இவர்களை மன்னித்து
நன்றாக சமையுங்கள்
சிற்சில தவறுகள் செய்யுங்கள்
உபன்யாசகர் கெஞ்சிக் கேட்டுகொண்டார்
எவன் கேட்கிறான்
அவனவன் கையில் செல்போன்
அத்தனைபேரும் வேதவித்து
இன்னும் மிஞ்சியிருப்பது
இரண்டு ரொமாலி ரொட்டிகள்தான்
தொட்டுக்கொள்ள பஞ்சகவ்யமும்
தாகத்திற்கு இரண்டு நைல் ஷாம்பூ பாட்டில்களும்
உங்கள் குழந்தைகளுக்காக
கவலைகளை வாங்கி வைக்காதீர்கள்
மாறாக கவலைப்பட கற்றுக்கொடுங்கள்
பெருந்துன்பத்தின் வேர்களிலிருந்து
மூலிகை பெட்ரோல் கிடைக்கும்
அன்புத்தோழி ப்ரிவ்யூ ஷோவில்
காஸ்ட்ரோ குவிக்குவி விற்ற
சுண்டலை வாங்க எவனுக்கும்
வக்கு இல்லை
ஜார்ஜ் புஸ்ஸூம் வந்திருந்தான்
சினிபிளெக்ஸ் தியேட்டர்களுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பன்றிகள்
விடுதலையானதும் நாம்
பால்குக்கரை அடுப்பிலிருந்து இறக்குவோம்
மனம் ஒரு குரங்கு
அதன் உடலெங்கும் சிரங்கு....
வாழ்த்துக்கள் செல்வேந்திரன். அதுக்காக இப்படியா கவிதைகள்
Post a Comment