Tuesday, October 9, 2007

Wishes: கொங்கு ராசா

2005, 2006 ம் ஆண்டுல எல்லாம் செம கலக்கலா எழுதிட்டு இருந்தாரு. இப்போ.. கழுதை தேய்ஞ்சு கட்டெரும்பான கதையா ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா போட்டுட்டு இருக்காரு .

அவர் எழுதின அருமையான பதிவுகள்:
வேட்டிக்கட்டு, வென்னிலா கேக், growup man, என்ன உறவு... etc இப்படி நெறைய சொல்லிட்டே போவலாம்.

கல்யாணத்துக்கு அப்புறம் அவர் சொன்ன வசனம் " அது அறியா வயசு, இது காய் அரிஞ்சு தர வயசு".
என்ன ஒரு தத்துவம்?

எனக்கு எல்லாம் பதிவு எழுதனும்னு ஆசை வந்ததே இவராலதான்.

வ.வா.சவுல இவர் எழுதுன லொள்ளுசபா மனோகர் பதிவு இன்னும் சிறந்ததா மனசுல நிக்குது.

கொங்கு நாட்டுத்தங்கம், பொள்ளாச்சி பண்ணையகாரர் "கொங்கு ராசா"வுக்கு இன்னிக்கு பொறந்த நாளு. (Oct-9)

இப்படிக்கு:
சங்கம் &
கொங்குவாசல் நண்பர்கள்.

Monday, October 8, 2007

B -ve blood needed - Chennai - Oct 12th

சென்னை அபோல்லோ மருத்துவமனையில் வருகிற அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ள இருதய அறுவை சிகிச்சைக்கு B-ve(B negative) வகை ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்ததானம் செய்ய விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
09886411375
9840026188

Sunday, October 7, 2007

Wishes : "கொடுமை" உஷா


உலகத்தில் இருக்கும் அத்தனை கொடுமையும் இவங்களை கண்டா குஷியா கொடுமை பண்ண வந்துடும் என்கிற அளவுக்கு பல கொடுமைகளை கண்டு "கொடுமை உஷா" என்று நற்பெயருடன் ப்ளாக் உலகில் பல வருடங்களாக உலா வரும் உஷா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது
சங்கம்


"என்ன கொடுமை சார் இது" என்ற டயலாக்கின் பிறப்பிடமே இவர் தான் என்று வரலாற்று ஆய்வுகள் கூறிகின்றது. இருந்த போதிலும் இந்த டயலாக்கை உபயோகப்படுத்துவதற்கு எந்த ராயல்டியும் தேவையில்லை என்று கூறியதை வைத்து இவரின் ராயல்டியை நாம் அறிந்துக் கொள்ளலாம். அதுக்காக ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கம்(UK தான்) கொடுத்த ராயல் பர்த்டே பேரடு கீழே...

Friday, October 5, 2007

Wishes : Dreamz (தினேஷ்)

நான் கடவுள் அது போல் நீங்களும் கடவுள் என்று "அன்பே சிவம்" கமல் போல் எங்கும் அன்பால் புன்னகை பரவட்டும் என்றும், கண்களை மூடி கனவு காணுங்கள் என்றும் கூறி, தன் கவிதையால் கனவுகள் காணும் டிரீம்ஸ் @ தினேஷ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் காணும் கனவுகளை போல அவர் வாழ்வும் வண்ணமயமாக என்றும் இனிக்க இனிதே வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

ப்ளாக் யூனியன்

மற்றும்

சங்கம்


உங்கள் இனிய பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான இரு விசயங்கள் கீழே...



Wednesday, October 3, 2007

வ.வா.சங்கத்துக்கு என்ன ஆச்சு? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

Tuesday, October 2, 2007

Salute to Gandhi

Monday, October 1, 2007

Wishes: ஜி

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




அவர் தன்னுடைய வருங்காலங்களில எல்லாம் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவது,

சங்கம்.