Friday, July 30, 2010

Wishes : அழகிய சிங்கர் மற்றும் அருஞ்சுவை சங்கர் !

பதிவுலக பெருந்தைகள் இருவருக்கு இன்று பிறந்த நாள், எத்தனையாவது என்று கேட்காதீர்கள் கவர்ச்சி குறைந்துவிடும் :)

********



சொந்தங்களே,

30-07-2010 பிரபல பாடகர் ”அண்ணண்” புதுகை அப்துல்லா , பிரபல இயக்குநர் அண்ணண் கேபிள் சங்கர் எனப்படும் சங்கர் நாரயணண் இருவருக்கும் பிறந்த நாள்.

என்னோடு இணைந்து உங்கள் வாழ்த்த உங்களை அழைக்கிறேன்.

ஜூலையில் பிறந்த சூரர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கும்
ஜோசப் பால்ராஜ்

Sunday, July 25, 2010

Wishes: சீனா ஐயாவின் பேத்தி நீனாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

நமது சீனா ஐயா - செல்விஷங்கர் அம்மாவின் செல்லப் பேத்தி நீனாவுக்கு இன்று முதல் பிறந்தநாள், குழந்தை எல்லா வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துவதுடன், நீனாவின் பெற்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.







நீனாக் கண்ணா ! நீ
நிமிர்ந்து பார்த்து சிரிக்கிறாய் !
நீண்ட உலகம் உனக்குத்தான் !
கைகள் தட்டி ; கண்கள் சிமிட்டி !
கனி வாய் திறந்து மகிழ்கிறாய் !
மணியாய் மகிழ்ந்து ! பிரியா
இதழ்கள் நாதம்(ன்) இசைக்கும்
நல்ல குடும்பம் உனக்கு !
நல்லவை எண்ணி ! நாளும்
சிறக்க நல்வாழ்த்துகள் !
நாளை உலகம் உனக்குத்தான் !
நான்முகக் கடவுள் நல்குவான் !
நாளும் மலர்ந்து ! நன்றாய் மணக்க !
அய்யய்யா ! அம்மம்மா ! அன்பு வாழ்த்துகள் !
அண்ணன் ! அக்கா ! ஆடி மகிழ
கூடி மகிழும் குழந்தை நீ !
குவளையம் சிறக்க
குறுநகை புரிவாய் !

அன்புடன்
சீனா

Wednesday, July 21, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.


இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)

Tuesday, July 20, 2010

சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று நம் சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அவருக்கு பிடித்தமான வைத்தீஸ்வரன் கோவில் அருள் மிகு செல்வமுத்துகுமரனை வேண்டுகிறோம்.

குறிப்பு #1: இதிலே யார் சீமாச்சு அண்ணா என கேட்பவர்களுக்கு அண்ணன் அவர்கள் தன் கையால் ஒரு பவுன் மோதிரம் பரிசளிப்பார் என தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

குறிப்பு # 2: வந்து வாழ்த்துங்க. வேற எதும் இல்லை.

Thursday, July 15, 2010

Wishes : நிஜமா நல்லவருக்கு நிஜமான தேவதை !

பதிவுலக அன்புத்தம்பி நிஜமா நல்லவருக்கு இரண்டாவது குழந்தையாக குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.




Baby Profile Graphics and Comments



குட்டி தேவதை நல்லாசிகள், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், குட்டி தேவதையின் சுட்டி அண்ணனுக்கும் நல்வாழ்த்துகள் !

Monday, July 12, 2010

Wishes: ஜெயஸ்ரீ ஐயப்பன்

இன்று(12-07-2010) 4வது பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படப் பிதாமகர், புனைவுகளின் திருமகர், வெண்பா வாத்தியார் ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சியின் குட்டி தேவதை ஜெயஸ்ரீயை எல்லாரும் வாழ்த்தலாம். கூட்டமா கெளம்பி வாங்க.



நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?