Sunday, December 28, 2008

Birthday: அனுசுயா

இன்னைக்கு ஒரு பூவுக்கு பிறந்த நாள்..

யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...

.
.
.
.




இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...



.
.
.
.




பூன்னா உயிரே விடுவாங்க..



.
.
.
.




புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க



.
.
.
.




திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..



.
.
.
.

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..



.
.
.
.




அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..



.
.
.
.




இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..



.
.
.
.
.
.
.
.
.




கண்டுபிட்ச்சிட்டீங்களா???



.
.
.
.




ரைக்ட்.... அவங்களேதான்..


இன்று (Dec 27) பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

Wednesday, December 24, 2008

Birthday: பெருந்தலைக்கு பிறந்தநாளு :)




இந்த இடுகைக்கு வசனம் தேவை இல்லை...

Friday, December 19, 2008

Birthday: சாரு நிவேதிதா


Pic courtesy: India Glitz

Thursday, December 18, 2008

Wishes: K.R.அதியமான் ! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்பே சிவம், வாழ்வே தவம்.. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா... மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா..

என்று வலையின் தலையெழுத்து எழுதிவைத்திருக்கும் நண்பர் K.R.அதியமான் அவர்களுக்கு இன்று 18 / Dec பிறந்த நாள்.

சென்னையில் பதிவர் சந்திப்பின் போது மிக நட்பாக உரையாடினார், "உங்க பிறந்த நாள் தேதி என்ன ?" என்று கேட்டார். நான் சொன்னதும், "என்னங்க என்னோட பிறந்த நாள் தேதியைச்ச் சொல்றிங்க...உங்களுக்கு ஜோசியம் தெரியுமா ?" ன்னு கேட்டார். ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்.



அண்ணார் / தம்பியார் என்று சொல்ல முடியாத நண்பர் அதியாமனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !


Wednesday, December 17, 2008

Wishes: கோவி. கண்ணன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கோவியாத கண்ணன்! கோவி கண்ணன்! நாகையின் மன்னன்! சிங்கையின் அண்ணன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ண்ணே! (Dec-18)

கோலிவுட்டில் கோவி-ன்னு ஒரு புது பிராஜெக்ட் வந்திருக்கு! கோ.கோ!
இந்த கோ.கோ-க்கு கோடம்பாக்கம் ஹோட்டல்-ல நயன் தலைமையில் நடிகைஸ் ஒன்லி பார்ட்டி வேற இருக்காம் இன்னிக்கி! வழக்கமா கூப்புடுற சிபியாரைக் கூட கூப்புடுலையாம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவி. அண்ணா!
தாங்கள் எல்லா நலமும் பெற்று,
நீடும் பீடுமாய் வாழ,
இறைவனும்,
ஈரோட்டுத் துறைவனும்,
நல்லாசி நல்கட்டும்! :)
Wish you Many Happy Returns of this Day! :)


சரி, கோ.கோ. சம்பந்தமா எதுவா இருந்தாலும் சங்கத்துல தனி போஸ்ட்டா போட்டுக்கறேன்! :)
இப்போ, கேக்-ஐ மட்டும் நீங்க வெட்டுங்க-ண்ணே!
மத்ததெல்லாம் நம்ம மக்கள்ஸ் வெட்டுவாங்க.... :)
ரெடி, இஸ்டார்ட், மீஜிக்!


கோவி அண்ணன் வாழ்த்துப் பதிவில், ஒரு கருத்து கூட சொல்லலீன்னா எப்பிடி? ஹிஹி..... இதோ என் பங்குக்கு பதிவர். கன்ஃப்யூசியஸ்! :)

Wishes: குசும்பன்

பெயர்: குசும்பன்
வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது






பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com


குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்,
சங்கம்

Friday, December 12, 2008

Wishes: ஐயா ஞானவெட்டியான் பிறந்தநாள் !

எனது பெருமதிப்பிற்கும், பலரது அன்பிற்கும் இலக்கணமாக திகழும், வாழும் சித்தர் திரு ஞானவெட்டியான் ஐயா அவர்களுக்கு இன்று (13 Dec 2008) பிறந்த நாள்.


ஐயா அவர்கள் நோயின்றி நல்துணையுடன் நெடுங்காலம் வாழவேண்டும் என்று

உளமாற (பதிவர்களின் சார்பிலும்) வாழ்த்துகிறேன் !