Thursday, May 19, 2011

Birthday: லவ்டேல் மேடி









ஈரோட்டுப் பெண்களின் மாதவன்(மேடி)
காரோட்டும் பெண்களின் கேடி,
 தறியோட்டும் பெண்களின் ரெளடி,
கறிவெட்டும் பெண்களின் கரடி..

மேடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

இவண்
ஈரோடு தமிழ்ப்பதிவர்கள்

Tuesday, March 22, 2011

மாப்பி பவனுக்கு பிறந்தநாள்

ஊர்ல பேச்சு வழக்கில் சொல்லுவாங்க “ங்கொப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க” பாருன்னு, அதுமாதிரி சிங்கக்குட்டி பவன் அப்படியே அப்பா வெங்கியை உரிச்சிவெச்சிக்கிட்டு இருக்கான்...

மாப்பி இன்று 5 வது பிறந்த நாளை கொண்டாடுகிறான். அப்பா மாதிரியே சேவைகள் பல செய்து நன்றாக இருக்கும் படி வாழ்த்துகிறேன்.


Friday, March 18, 2011

Wishes: பாஸ்டன் ஸ்ரீராம்- It's a Baby Girl

புரொபைல்ல சின்ன வயசுல எடுத்தப் படத்தைப் போட்டு, நம்மளை எல்லாம் ஏமாத்தின பாஸ்டன் ஸ்ரீராம் இன்று(Mar-17 8:25PM EST) ஒரு தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

Many Many Many more happy returns of the Day SriRam! :)


Sunday, February 20, 2011

திருமண வாழ்த்து - சஞ்சய் காந்தி


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைந்திருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

Wednesday, January 5, 2011

Wishes - ஆயில்யன்



வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Tuesday, December 28, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.


Tuesday, December 7, 2010

Wishes : ஜீவ்ஸ் பிறந்த நாள் !

16 ஆவது பிறந்த நாளை 16 ஆண்டுக்கும் மேலாக கொண்டாடும் நிழல்படக் கவிஞர் நம்ம ஜீவ்ஸுக்கு இன்று பிறந்த நாள் :)



ஜீவ்ஸ் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

- சுவரொட்டிக் குழு