Thursday, December 17, 2009

Wishes : குசும்பன்


பெயர்: குசும்பன்
வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது


சமீபத்திய சந்தோசம் : ஜூனியர் குசும்பன்





பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com


குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்,
சங்கம்


நன்றி : கப்பி

Sunday, December 6, 2009

ஹேப்பி பர்த்டே 2 யு


இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர்கள் திரு. ஜீவ்ஸ், மற்றும் திரு. ஜவஹர் இருவருக்கும் பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஹேப்பி பர்த்டே பாஸ்-பாஸ்....

Saturday, December 5, 2009

New born Wishes : வா. மணிகண்டன்


நவம்பர் 28, 2009 அன்று ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கும் கவிஞர் வா. மணிகண்டனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, November 29, 2009

Cheena- சீனா ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நமது இனிய நண்பரும், வலைச்சர பொறுப்பாசிரியருமான சீனா ஐயாவுக்கு இன்று (29-11-2009) பிறந்தநாள். அனைத்து வளங்களும் பெற்று அவரும், அவரது குடும்பத்தினரும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றோம்.

வாழ்த்துவது
சங்கம்.

இந்த நல்ல நேரத்தில் ஒரு அழகான பாடலை அவரது பேரன் பேத்திகள் தயார் செய்த இனிய பாடலினை பரிசளிக்கின்றோம். நன்றி : Newbee அக்கா

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

சிவா- தர்சினி திருமண வாழ்த்துக்கள்

!! சிவா- தர்சினி திருமண வாழ்த்துக்கள் !!



மேல் விபரங்களுக்கு - http://siva-dharsini.weddingannouncer.com/

வாழ்த்துகளை தெரிவிப்பவர் : "பார்வைகள்" கவிதா

Friday, November 27, 2009

மணநாள் வாழ்த்துகள், அமுதா!


"என் வானம்" தம்பதியினருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்!! :-)

Wednesday, November 25, 2009

Wishes: வெளிச்சப் பதிவருக்கு திருமணநாள் வாழ்த்துகள் !

வெளிச்சப் பதிவர் என்று அழைக்கபடுபவரும், ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் கொண்டவருமான, பதிவர் அத்திவெட்டி (அலசல்) ஜோதி பாரதி இன்று ஏழாம் திருமண நாள் கொண்டாடுகிறார்.





சிங்கைப் பதிவர்கள் குழுசார்பாக வாழ்த்தியவர்கள்,




நண்பர் ஜோதி பாரதி மற்றும் திருமதி ஜோதி பாரதி இணையர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகள்



அன்புடன்

கோவியார்.
வாருங்கள், வாழ்த்துங்கள் !