* டயாப்பர் சேஞ்சில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒரே பதிவர்!
* திருநெல்வேலி பக்கம் தான் என்றாலும், அல்வா கொடுக்கவே ரொம்பவும் வெட்கப் படுபவர்!
* கோபிகாவுக்குக் கண்ணாலம் ஆயிருச்சே என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், பதிவு போட்டு அழுத வலையுலக உத்தமர்!
* இட்லிக்கும் தோசைக்கும் மாவரைக்கும் பதத்தை, பல இன்டர்நேஷனல் குக்குகளுக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கும் சமூக சேவகர்!
* அண்மையில் ஒரு லட்சம் தலை வாங்கிய...சாரி, ஒரு லட்சம் லட்டு வாங்கிய....ச்சே...சாரி, ஒரு லட்சம் ஹிட்டு வாங்கிய அபூர்வ சிகாமணி!
இன்னும் எவ்ளோ சொல்லலாம்!
நான் 108 இல்லை 4000 சொல்லலாம்-னு நினைச்சேன்!
ஆனா அவை அடிக்கம் கருதி, இத்தோட என் கும்மியை நிறுத்திக்கிட்டு, அடியார்(ள்)கள் கும்மிக்கு வழி விடுகிறேன்! :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி!
Many Happy Returns of the Day!

இந்த நாள் இனிய நாளில் (Dec-01), உங்கள் பக்கத்து சீட்டில், பதிவர்களே வந்த உட்கார வேணுமாய், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)
இது பதிவைப் படிக்காது, படம் பார்த்துக் கதை சொல்பவர்களுக்கு மட்டும்: