Friday, September 10, 2010

நம் பதிவர் சகோதரி G3 - செந்தில்குமார் திருமண வாழ்த்து!!!


திருமண வாழ்த்து

மணமகள்: G 3 என்கிற காயத்ரி
மணமகன்: செந்தில் குமார்
இடம்: பெசண்ட் நகர் சமுதாயக்கூடம்
நாள்: செப்டம்பர் 10 - 2010


இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன் நிர்ணயிக்க
இவருக்கு இவளே துணை என்று
இருவீட்டார் நிச்சயிக்க - இங்கே
இனிதாய் துவங்குகிறது ஒரு
இல்லறப்பயணம்

மத்தளங்கள் கொட்ட
மலர்க்கூட்டம் பொழிய
அட்சதையேற்று இவர்கள்
அமர்ந்திருக்கும் நேரம்
வாழ்க! வளர்க!! வளம் பல பெருக!!! என்று
எண் திசை அனைத்திலும் வாழ்த்துரை நிறைந்திருக்க
அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
இசையும் இனிமையுமாய் இணைபிரியாதிருக்கவும்
அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்
தமிழ் வலைப்பதிவர்களாகிய நாங்கள்!

18 comments:

  1. வாழ்த்துக்கள் ஜி3

    என்றும் அன்புடன்
    சகோதரன்
    இளா

    ReplyDelete
  2. தம்பதியருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. காயத்ரி & செந்தில் தம்பதியருக்கு,

    மனம் போல் வாழ்வு அமைய எங்கள் இனிய ஆசிகள்.

    நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே கல்யாணம். இப்படி மிஸ் பண்ணிட்டு ஊரைவிட்டு வந்துட்டேனேன்னு இருக்கு!

    ReplyDelete
  4. அன்றில் பறவையாய் மணமொன்றி வாழவும்
    இசையும் இனிமையுமாய் இணைபிரியாதிருக்கவும்
    அன்புருவால் நின்று ஆசீர்வதிக்கின்றோம்

    வாழ்கவளமுடன் ஜி3- செந்தில்

    ReplyDelete
  5. may god bless the couples with all the happiness

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி3 ;)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் G3 :)

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துகள் மணமக்கள் பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  9. இனிய திருமண வாழ்த்துக்கள் G3 & Senthil :)
    முருகனருளால் நீடு பீடு வாழ்க,
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்! :)

    ReplyDelete
  10. செல்வி காயத்ரி ,திருமதியாகும் இந்நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மனம் பொருந்தி மணமிகு வாழ்வு செழிக்க எங்கள் ஆசிகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  12. இன்று போல் என்றும் வாழ்க

    ReplyDelete
  13. இன்று போல் என்றும் வாழ்க

    ReplyDelete
  14. தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. @இளா,
    @ராமலக்‌ஷ்மி,
    @துளசி கோபால்,
    @முத்துக்கா,
    @புதுகை தென்றல்,
    @கோபி,
    @மயில்,
    @ப்ரியமுடன் வசந்த்,
    @கே ஆர் எஸ்,
    @வல்லிசிம்ஹன்,
    @ராம்ஜி_யாஹூ,
    @கார்த்திக்,
    @கானா பிரபா,
    @வழிப்போக்கன்,

    உங்க எல்லாரோட வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :)

    பதிவு போட்ட அபி அப்பாவுக்கு ஸ்பெஷல் நன்னி :)

    ReplyDelete
  16. வணக்கம்.காமராஜ் அவர்களின் வலைத்தளம் முலமாக உங்களை கண்டு கொண்டேன் .மிக்கமகிழ்ச்சி

    ReplyDelete