Tuesday, June 29, 2010

நம்ப மக்காவுக்கு பொறந்தநாளுங்க

கவிதையை பொழப்பாக்கி
வாழற சனம் மத்தியிலே
கவிதையை பொறப்பாக்கி
தெனம் தந்த ராசா

கருவேலமரத்து நிழலு
வெயிலு நேரத்தோட ஓஞ்சுச்சு
அந்த நிழலோட வெப்பத்தையும்
உணர வைக்கும் உன் கவிமூச்சு


கோயில்ல சாமியைவச்சு படைக்குற
மனுசப்பயலுக்கா(க) - எங்க
சாமி மனசை கோயிலாக்கி
வாழுது பாரு மக்கா

சோத்தை பங்கு போட்டு
பாசத்தை ஊட்டும் தாயா(ய்)
நேசத்தை நெஞ்சுல வைச்சே
எழுத்தை சுமந்தே சேயா(ய்)

இத்தனை அன்பை எழுத்துல வச்சு
ஆதரவா தோளுல தூக்கி
செல்லமா முத்தங்கொடுத்து
தமிழை தாலாட்ட உன்னைத்தாண்டி
யாருமில்லை ஈடு..
கவிதை புரியாதவனை புரியவைக்க
எடுக்கலை நீ பாடு...

உன் குடும்பமுன்னு சொல்லும்போது
நானுமிங்க சேர்ந்து நிப்பேன்.
உன் பொறப்புல ஒண்ணா இல்லையேன்னு
கொஞ்சம் தவிச்சு வைப்பேன்

***

இன்னைக்கு (29/06/2010) பொறந்த நாளு கொண்டாடுற, நம்ப மக்கா பா. ராஜாராம் அண்ணனுக்கு ஒறமொறை சகிதமா வாழ்த்துச் சொல்ல கூப்பிடுறேன்.

வந்து வாழ்த்திட்டுப் போங்க மக்கா!
*
*

32 comments:

  1. பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை சொல்லிச் செல்கிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பா. ரா.

    ReplyDelete
  3. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அன்பின் மகாப்பா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    :-)

    ReplyDelete
  5. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா.ரா....!

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

    ReplyDelete
  7. அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பா ரா.

    கவிஞரை வாழ்த்தி நீங்க எழுதியிருக்கும் கவிதை அருமை சென்ஷி:)!

    ReplyDelete
  9. ஓஹ்.. இன்னைக்குத்தான் பிறந்தநாளா... வாழ்த்துகள் ராஜாராம்.

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  11. வாழ்த்துக்களும், வணக்கங்களும் தலைவரே...

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

    எப்பவும் சிரிச்சிட்டு இருக்குற போட்டோ கிடைக்கலையா. பாஸ்போர்ட்டுக்கு எடுத்த போட்டோ மாதிரி இருக்கு :)

    அனேகமாக இதுதான் வலையில் அவரது முதல் படம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. @ அக்பர்..

    உண்மைதான். என்னிடமிருந்த ஒரு புகைப்படம் இது மாத்திரம்தான். பா.ரா.வை நேரில் சந்தித்த மற்ற நண்பர்களின் மின்மடல் முகவரி தெரியாததால் அண்ணனின் புதிய புகைப்படம் கேட்க இயலவில்லை. தங்களிடம் இருப்பினோ அல்லது தொடர்பிலிருப்பவர்களிடம் இருந்தாலோ கொடுத்துதவவும்.

    ReplyDelete
  15. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. படத்தெப் பார்த்தா, பொலீஸ் வேலைக்கான ஆளு மாதிரி இருக்கு, ஆனா என்னமா எழுதுறாரு பாருங்க!

    வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  17. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நன்றி சென்ஷி!

    நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

    நன்றி ராஜசுந்தரராஜன் அண்ணே!

    ReplyDelete
  19. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் PARA

    ReplyDelete
  20. பூங்கொத்துடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பா. ரா!

    ReplyDelete
  21. வாழ்க வளமுடன்!பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வாழ்த்துகள் மக்கா ..

    சொல்லவே இல்ல !

    ReplyDelete
  23. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா.ரா அண்ணா.

    நன்றி சென்ஷி. பா.ரா அண்ணனோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அவற்றை பதிவில் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் வெளியிட இயலவில்லை. இப்போது நீங்கள் கருவேல நிழல் நூலின் பின் அட்டையில் உள்ள பா.ராவின் படத்தை வெளியிட்டதன் மூலம் நம் சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். தேவையெனில் சொல்லுங்கள் அண்ணனின் மற்ற புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

    ப்ரியங்கள் நிறைந்த ஒரு மனிதரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி சென்ஷி.

    ReplyDelete
  25. @செ.சரவணக்குமார்...

    உங்ககிட்டேதான் கேக்க நினைச்சேன். ஆனா மெயில் ஐடி இல்லாததால விட்டுப்போச்சு. :(

    என் மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்க இயலுமா?

    senshe.indian@gmail.com

    ReplyDelete
  26. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பா.ரா..

    கவிதை நல்லா இருக்கு சென்ஷி.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் பா. ரா அண்ணே

    ReplyDelete
  28. பா.ரா அண்ணனின் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளேன் நண்பரே.

    நன்றி.

    ReplyDelete
  29. என்றும் வளமோடு பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள் பாரா அண்ணே..

    உங்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  30. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரா அண்ணாச்சி... :))

    ReplyDelete
  31. இப்போதுதான் அறிந்தேன். மிக்க சந்தோஷம்.
    வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete