Monday, March 10, 2008

Wishes: மின்னல்

பேச்சுலராக இருந்து நேற்று முதல் பேச்சிலராகியிருக்கும் மின்னலுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!!! வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குசும்பனின் டிப்ஸுக்கு ஒரு ரிப்பீட்ட்டு இடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்!!

சங்கத்தின் சார்பாக மின்னலுக்கு தபாலில் அனுப்பிய மொய் பணம் தபால் தலை ஒட்டாததால் சங்க ஆப்பீஸுக்கே திரும்பிவிட்டது. ஹனிமூன் முடிந்ததும் மின்னலு நேராக வந்து தல கைப்புவிடம் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டு மொய் பணத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டுகிறோம்!!

வாழ்த்துக்கள் மின்னல் & திருமதி மின்னல்!!

5 comments:

  1. மின்னலுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!! :-D

    ReplyDelete
  2. மின்னல், இப்பத் தான் மெய்யாலுமே மின்னப் போறாரு! வாழ்த்துக்கள் தல & அண்ணி! :-)
    இல்லறம் செழித்து இனிதே வாழ்க!

    ReplyDelete
  3. பேச்சிலரில் இருந்து 'பேச்சு இலராக' ப்ரொமோஷனா?

    வாழ்த்துக்கள் மின்னல்

    ReplyDelete
  4. //சங்கத்தின் சார்பாக மின்னலுக்கு தபாலில் அனுப்பிய மொய் பணம் தபால் தலை ஒட்டாததால்//

    எலே கப்பி
    தபால் தல கூட உன்னால சரியா ஒட்ட முடியாதா? இப்ப பாரு! அனாவசியமா கெட்ட பேர் யாருக்கு?- தபால் தலைக்கா? கைப்பு தலைக்கா? :-)

    கைப்ஸ்
    இந்த "தலை" பிரச்சனை, "தலை"யாய பிரச்சனை! இதுக்குத் தனிப் பதிவு போடுங்க! இங்க வேணாம்! நம்ம கப்பி "தலை"யில ஒரு ஷொட்டு குடுத்தே ஆவணும்! :-)

    ReplyDelete
  5. கேக்க மறந்துட்டேனே! மொய்ப்பணம் எம்புட்டுய்யா அனுப்பிச்சீங்க! மின்னல் இட்ட பின்னூட்டத்தை எல்லாம் ஒழுங்கா கவுண்ட் பண்ணித் தானே அனுப்பிச்சீங்க? :-)

    ReplyDelete