Tuesday, May 27, 2008

Wishes:ஜீ.ரா

ஜீ.ரா என்னும் ஆன்மிக பதிவருக்கு இன்றுடன் 29 வயது முடிந்து 27 வயது ஆரம்பிப்பதால் எல்லாரும் வழக்கமாய் சொல்லும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லவும். கீழே இருக்கும் படத்திற்கு தனியாக வசனமோ அல்லது வேறு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை என அறிவிக்கப்படுகிறது.





Happy Birthday Gi.Ra... :-)

Sunday, May 25, 2008

Wishes: டுபுக்கு

அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி எதோ ஒரு சீன்ல தன் வூட்டுக்காரம்மாவை விளிக்கிறதுக்கு "தங்கமணி"னு சொல்லுவாரு. யாருமே நோட்டிஸ் பண்ணாத அந்த "தங்கமணிக்கு" தன்னோட "தங்கமணி-ரங்கமணி" பிராண்ட் ஆஃப் காமெடி மூலம் அமரத்துவம் பெற்றுத் தந்த "காமெடியின் அப்பா" (IPL பொழுதுபோக்கின் அப்பாங்கிற மாதிரி...ஹி...ஹி...)அண்ணாத்தே டுபுக்கு இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.



வாங்க...எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம் - Happy Birthday Dubukku

Saturday, May 24, 2008

Wishes: திவ்யா

கதை சொல்றவங்களை பாட்டின்னு சொல்லுவாங்க. பாட்டி வடை சுட்ட கதையிலே இருந்து நிலவுல பாட்டி தோசை சுடுறாங்கன்னு சொல்ற அளவுக்கு எல்லார் மனதிலும் இடம் பிடிக்கிறவங்க அருமையா கதை சொல்றவங்கதான்.

அட.. இங்கவும்் ஒருத்தங்க இருக்காங்களே.. நல்லா கதை சொல்லுவாங்க. மாடர்ன் கதைகள், காதல் கதைகள், நட்பு கதைகள். அதையும் தாண்டி ட்டிப்ஸ் கொடுக்கும் மன்னி. மாமியாரிடம் மருமகள் எப்படி நடந்துக்கொள்வது, கணவனிடம் மனைவி எப்படி நடந்துக்கொள்ளவேண்டும், காதலை எப்படி ப்ரோப்போஸ் பண்ணலாம்.. இன்னும் நிறைய.. ஐடியா கிணறு இவங்க. என்றும் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருக்கு.


எப்போதும் இதேப்போல் ஐடியாக்கள் நிறைய கிடைத்து கதைகளும் டிப்ஸ்களும் உங்கள் வலைப்பூக்களை நிறைய வேண்டும். உங்கள் வலைப்பூ மட்டுமல்ல உங்கள் மனதிலும் மத்தாப்பூகளாக சந்தோஷங்கள் நிறைந்திருக்க, உங்கள் வாழ்வின் எல்லா கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வாழ்த்துவோமாக.

Thursday, May 22, 2008

Wishes: கீதா சாம்பசிவம்

தன் கம்ப்யூட்டரின் RAMக்குள் எல்லாம் ராமனைக் கண்டு ராமாயணம் எழுதும் கலியுகக் கம்பி, காக்கை,குருவி,பூனைக்கெல்லாம் தன் இல்லத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்துக் கொடுத்த கருணையின் திருவுருவம், தமிழ் புலவர், ஹிந்தி பண்டிட், இணைய ஒளவை, எங்கள் 'ஒன் அண்ட் ஒன்லி' தங்கத் தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களின் பிறந்தநாளான இன்று(22-05-2008),பல்லாண்டு வாழ்கவென அவர்களை வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்.




Happy Birthday Madam

Tuesday, May 20, 2008

Wishes: யோகன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகன்

Wishes: சினேகிதி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சினேகிதி.

Monday, May 19, 2008

Wishes: நாமக்கல் சிபி


பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணே.. வயசாச்சேன்னு கவலை படாதீங்க.. எஞ்சாய்... :-)

Sunday, May 18, 2008

Wedding: இம்சை அரசி


இன்று 18.05.08 இம்சை அரசி @ ஜெயந்தி - மோகன் பிரபு இனிய இல்லற வாழ்வில் இணைகின்றனர். அவர்களுக்கு நம்முடைய திருமண நல்வாழ்த்துக்கள்.

Friday, May 16, 2008

Wedding:வேதா

We wish you a very very happy Married Life(May 15th)

Tuesday, May 13, 2008

Vacancy: J2EE Technical Lead / Project Manager

No of positions: 10

5- 14 Years of experience

Spring, Hibernate, JSF, EJB 3.0
Working knowledge of Design patterns
Ability to Lead a team
Client facing skills
RDBMS knowledge
Sun certified preferred
Expertise in Open source
Preferred experience in modeling tools like RSA

Job Location: Bangalore

Communication skills (confidence level & presence of mind) are extremely important

Send your resumes to ilamurugu at gmail dot com

Sunday, May 11, 2008

Wishes: வெட்டிப்பயல்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் வலைப்பதிவுலகின் அனானிகள் எல்லாம் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருப்பதாக வெட்டி93.8 FM ஓர் அவசரச் செய்தி வெளியிட்டுள்ளது!
அதன்படி, அனானிகள் எல்லாம் இனி பின்னூட்டம் போடுவதை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள்!

ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தீர்கள் என்று அனானிகளைக் கேட்டதற்கு, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்....
இதோ களத்தில் இருந்து நம் சிறப்பு நிருபரு, பாலாஜி மனோகருலு!

நிருபர்: ஏங்க இந்த விபரீத முடிவை எடுத்தீங்க?

அனானி: நாங்களா இந்த முடிவை எடுக்கலை வெட்டி! இந்த முடிவுக்கு நாங்க தள்ளப்பட்டிருக்கோம்!

நிருபர்: என்னாது....தள்ளப்பட்டீங்களா? உங்களைத் தள்ளிய கள்ளுடு எவுடு? மீக்கு தெலிசா?

அனானி: ஓ...அனானி என்பதால் தள்ளியது யாரு-ன்னு தெரியாது-ன்னு நினைச்சிட்டீங்களா வெட்டி? அனானியின் கால் அனானி அறியும்! தெரியுமா?

நிருபர்: ஓ கதை அப்படிப் போகுதா? சரி! அப்ப இனி மேல் நீங்க பின்னூட்டமே போடப் போறதில்ல! அப்போ வேற என்ன தான் பண்ணப் போறீங்க?

அனானி: பதிவு போடப் போறோம்!

நிருபர்: ஓ மை காட்! என்னாது? பதிவா? அனானிகளா?

அனானி: ஏன் போடக் கூடாதா? அனானிமஸ் ஆப்ஷன்-ல பதிவு போடறதுக்கு பிளாக்கர்-ல மாற்றம் கொண்டாந்துட்டாங்க, தெரியும்-ல?

நிருபர்: அடப்பாவிங்களா!

அனானி: பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான சமூகக் கடமையை முன்னிட்டு தான், நாங்க இந்த முடிவுக்கு வந்திருக்கோம்!

நிருபர்: எல்லாம் சரி தான்! ஆனா யாரோ ஒருத்தன் தான் உங்களை இந்த முடிவுக்குத் தள்ளி விட்டான்-னு சொன்னீங்களே? யாருங்க அவன்?

அனானி: அலோ! அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம்! பதிவுல உன்னை விட பெரிய வெட்டி யாரும் இல்லை, அதனால யாருக்கும் பயப்படாதே!
அதே மாதிரி உன்னை விட சின்ன பொட்டி யாரும் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!

நிருபர்: அடங் கொக்க மக்கா! நாம சொன்னது நம்பிள்கேவா?

அனானி: அவரு ஒரு காலத்துல கட்டு கட்டா பதிவு போடுவாரு! ஆனாக் கால் கட்டு ஆனதுல இருந்து ஒரு கட்டும் காணோம்! அட ஒரு சீட்டுக் கட்டு கூட காணோம்-பா!
பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்-னு ஒரு நாளைக்கு மூனு பதிவு போட்டவரு, இப்போல்லாம் பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்-னு சாப்பிடவே நேரம் சரியா இருக்குதாம்! எடைக்கு எடை வேற கூடப் கூடிப் போயிரிச்சாம்!

நிருபர்: அடப் பாவமே!

அனானி: அது இன்னா அடப்பாவமே? அடப் புண்ணியமே-ன்னு சொல்லு! அதான் நாங்க எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அவருக்குப் பதிலா, பதிவு போடலாம்-னு களத்துல எறங்கிட்டோம்! அவரோட வலைப்பூவைக் கூட சல்லீசா ஏலத்துல எடுத்துட்டோம் தெரியுமா? ஈ-பேல எவ்ளோ-க்கு எடுத்திருப்போம்-னு நினைக்கறீங்க? பின்னூட்டத்தல சொல்லுங்க பார்ப்போம்! கைக்கு டாக்குமென்ட்ஸ் கூட வந்திருச்சி! இதோ பாருங்க பட்டா!


நிருபர்: ஆகா, இந்த பட்டாவை நான் எங்கேயோ முன்னால பாத்திருக்கேனே?

அனானி: இனி அடிச்சி ஆடிருவோம்-ல? மொத ரிலீஸ் இன்னா தெரியுமா?
தூறல்+கொல்ட்டி=பல்ட்டி!

நிருபர்: ஆகா...!
(சிறப்பு நிருபரு, பாலாஜி மனோகருலு, மயக்கம் போட்டு கீழே விழ...)


ஒரு காலத்துல வலையுலகின் முத்தப் பதிவராய் இருந்து,
இப்போது மூத்த பதிவராய் மாறிவிட்ட,
மாப்பிள்ளை (இன்னுமா?) வெட்டி காருக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (May-11)!


பாலாஜி,
జన్మ థిన సుభ కన్క్షాలు!

ஜன்ம தின சுப கன்க்ஷாலு! :-))
வெட்டிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

Tuesday, May 6, 2008

Employment: .Net Immediate Opening

.Net Developers Required with Following skills.

Mandatory experience in: .Net, C#, C++, SQL Server
Exp: 2-5yrs
Communication skills (confidence level & presence of mind) are extremely important

Forward the resumes to ilamurugu at gmail dot com