Monday, August 27, 2007

Wishes: மணி பிரகாஷ்


கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா

தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*** stanza 2.. ***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா

ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா
(நன்றி: கவிஞர் அருண்)

சின்சினாட்டி சிங்கம்
திண்டுக்கல் திரிசூலம்
நடன சூராவளி
காலெண்டர் கவிஞர் ,
தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணிபிரகாஷ் அவர்கள் இன்று ஆயுள் கைதியாகிறார்..
திருமணம் என்ற சிறையில் அடைக்கப்படுகிறார்.


இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பா!!


வாழ்த்துவோர்,
கோபிநாத் & சங்கம்

4 comments:

கோபிநாத் said...

அண்ணன் மணி பிரகாஷ் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :)

ILA (a) இளா said...

hmm. என்னாத்த சொல்ல, நல்லா இருங்க. மணமக்கள் நீடூழி வாழட்டும்.

Arunkumar said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மணி :-)

நாகை சிவா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணி... வாழ்க வளர்க!